விளாத்திகுளம் ரூ.160.33- லட்சங்கள்  மதிப்பீட்டில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை MLA மார்கண்டேயன் தொடங்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூரில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.160.33- லட்சங்கள்  மதிப்பீட்டில் பூசனூர் to -வேடப்பட்டி சாலை, கந்தசாமிபுரம் to நமச்சிவாயபுரம் சாலை, வீரபாண்டியபுரம் to சாலை AD காலனி சாலை, வெங்கடேஸ்வரபுரம் சாலை, கோட்டநத்தம்  மயானம் செல்லும் சாலைப்பணிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,தொழிலதிபர் சுப்பாரெட்டியார், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து உள்ளனர்.