விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணியினை விளாத்திகுளம் MLA மார்க்கண்டயேன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், ஒன்றிய பொறியாளர் அலெக்ஸ், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.