விளாத்திகுளம் அருகே 100 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய MLA மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவஞானபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை மாயா வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.