தீரவீர செயல் புரிந்த விஜயகுமாருக்கு விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டையன் வாழ்த்து!
கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது மகள் தமிழினி உள்ளிட்ட குடும்பத்தினருடன் குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சிறுமி தமிழினி நீரில் அடித்து செல்லப்பட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்ற ஓட்டுநர் நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை சற்றும் தயங்காமல் துணிச்சலுடன் ஆற்று நீரில் இறங்கி சிறுமியை காப்பாற்றினார். சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாருக்கு மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட தமிழக முதல்வர் வரை அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் வீர தீர செயல் புரிந்த விஜயகுமாருக்கு மத்திய அரசின் சார்பில் ரசஷா விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜயகுமாருக்கு பலகி வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை விஜயகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.