மாணவ,மாணவிகளுக்கு சொந்த நிதியிலிருந்து ஊக்கத்தொகை வழங்கிய விளாத்திகுளம் மார்கண்டேயன் MLA !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி 78-வது ஆண்டு விழாவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு 6-ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ -  மாணவிகளுக்கு காலநிலை மாற்றம், வேலிக்கருவையில்லா விளாத்திகுளம்,தூய்மையான ஆக்சிஜனை பெறுவது எவ்வாறு உள்ளிட்ட தலைப்புகளில் பொது அறிவு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவ - மாணவிகளுக்கு ஊக்கத் தொகை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்கள்.

.நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தபசுமுத்து,முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஞானப்பிரகாசம், ரோஸ்லின் சாந்தி,பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஆசிரிய - ஆசிரியைகள் மாணவ - மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.