சர்ச்சையை கிளப்பும் விளாத்திகுளம் அம்பாள் நகர் BUS STOP - வீணாக்கப்படும் மக்கள் பணம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அலுவலகம் மற்றும் வீடு அமைந்துள்ள அம்பாள் நகரின் நுழைவாயில் அருகில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு MLA மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்ததையடுத்து, இது விளாத்திகுளம் பகுதி மக்களிடையே பெரும் பேசும் பொருளாக அமைந்ததோடு மட்டுமின்றி, அம்பாள் நகர் மட்டும்தான் சட்டமன்ற உறுப்பினருக்கு தொகுதியா? என்றும், குறிப்பாக தொகுதியின் பல்வேறு கிராமப்பகுதிகளில் புதிய பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை மட்டுமே நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அம்பாள் நகருக்கு மட்டும் ஏன் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியுள்ளது)


விளாத்திகுளத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் பரவலான கருத்தாக இருப்பது என்னவென்றால், அம்பாள் நகரை பொருத்தமட்டில் பெரும்பாலான மக்கள் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மட்டுமே பயன்படுத்தி தங்களது குடியிருப்புகளுக்குச் சென்று வருகின்றனர். அதேபோன்று அங்கு அமைந்துள்ள தனியார் பள்ளிக்கும் பள்ளி வாகனத்தில் மட்டுமே மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனரே தவிர அரசு அல்லது தனியார் பேருந்துகளில் வந்து செல்லும் மாணவர்களும் இல்லை... இத்தகைய சூழ்நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையே இல்லாத பேருந்து நிறுத்தம் ஒன்றை கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மிகுந்த முனைப்பு காட்டுவது ஏன்? என்ற கேள்விகளுடன்... அவர் குடியிருக்கும் பகுதி அதனால் தான் என்ற முனுமுனுப்பும் பொதுமக்கள் மத்தியில் இருக்கின்றது. 


குறிப்பாக, விளாத்திகுளம் 12 வது வார்டு பகுதிக்குட்பட்ட துளசிப்பட்டி பேருந்து நிறுத்தம் மிகவும் சிதலமடைந்து பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் ஆபத்தாக காட்சியளித்து வருகிறது என்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் துளசிப்பட்டி பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பேருந்து நிறுத்தம் கட்டித் தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் சட்டமன்ற உறுப்பினர் தான் குடியிருந்து வரும் அம்பாள் நகருக்கு மட்டும் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் எதற்கு? என்று இந்த பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு மக்கள் பணத்தை வீணடிப்பதாக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.  



இதேபோன்று விளாத்திகுளம் தியேட்டர் ஸ்டாப் பேருந்து நிறுத்தத்தை நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு பணியாளர்கள், கூலி வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் சூழலில் தற்போது வரை அங்கு ஒரு பேருந்து நிறுத்தமோ அல்லது பேருந்து  நிழற்குடையோ அமைப்பதற்கு எந்தவித சிறு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தேவையே இல்லாத அம்பாள் நகருக்கு ஏன் புதிய பேருந்து நிறுத்தம் என்ற எண்ணம்தான் தோன்றுகிறது. 


பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொகுதி மக்களின் நலனை எண்ணி தியேட்டர் ஸ்டாப் பகுதியில் புதிய பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கு முன்வராமல் தன்னுடைய சர்வாதிகாரத்தை காட்டும் விதமாக தான் குடியிருந்து வரும் அம்பாள் நகருக்கு புதிய பேருந்து நிறுத்தத்தை அமைக்க மிகவும் துரிதமாக செயல்பட்டு வரும் விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அம்பாள் நகரில், சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிறுத்தத்தை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், முதலில் காலாவதியாகி காணப்படும் துளசி பட்டி பேருந்து நிறுத்தத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிறுத்தமும், அதேபோன்று விளாத்திகுளம் அரசு பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என ஏராளமான மக்களுக்கு தேவையாக இருந்து வரும் தியேட்டர் ஸ்டாப் அருகில் புதிய பேருந்து நிறுத்தம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாகவும், விருப்பமாகவும் உள்ளது. 



(சொந்த கட்சியினர் சார்பில் மக்கள் சேவகர் என்று போற்றப்படும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பதித்து தொகுதி மக்களுக்கு தேவைப்படும் இடங்களில் இந்த புதிய பேருந்து நிறுத்தத்தை கட்ட வேண்டும். மக்கள் பணத்தை கொண்டு தன்னுடைய சொந்த விருப்பத்திற்காக செய்வதை சட்டமன்ற உறுப்பினர் தவிர்த்து அம்பாள் நகரில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு துளசி பட்டி மற்றும் விளாத்திகுளம் தியேட்டர் ஸ்டாப் அருகில் உடனடியாக பேருந்து நிறுத்தம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பது

விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர்களின் ஒருமித்த குரலாக உள்ளது....)