விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
ஹரியானாவில் நடைபெற்ற மத ஊர்வலத்தில் இந்துக்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்து,,தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ராம காளியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழக பொறுப்பாளர் குலை காதர், மாநிலச் செயலாளர் காளியப்பன் மற்றும் விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திரளாககலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.