வாழ்கையை முன்னேற்றிய ஆசிரியரிடம் செல்லமாக பிரம்பால் அடிவாங்கிய மாணவர்கள் -பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு கேக் வெட்டி அசைவ சைவ உணவு சமைத்து பரிமாறியமாணவ மாணவியர் அசத்தல். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழி  சத்திரிய இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற பள்ளி மாணவ மாணவியர் ஒன்றிணைந்து தங்களின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பிரம்பால் அடித்து கற்பிக்க வைத்து வழிவகித்த பள்ளி ஆசிரியகளை கௌரவிக்கும் வகையில் தங்களது மலரும் நினைவுகளை  வகுப்பறையில் பகிர்ந்து  கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு கேக் வெட்டி ஆசிரியர்களின் வாயில்   ஊட்டி மகிழ்ந்து அவர்களிடம் செல்லமாக பிறம்பால் அடி வாங்கி மாணவ மாணவியர் சைவம் அசைவம் அறுசுவை உணவு வகைகளை சமைத்து ஆசிரியர்களுக்கு பரிமாறி உட்கொள்ள வைத்து மகிழ்ந்தனர்.