மயானத்தில் தகன மேடை வசதி செய்து தரக்கூடிய விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியற்கு உட்பட்ட சுப்புலாபுரம் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயம் மக்கள் பயன்படுத்தி வரும் மயானத்திற்கான பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது முற்றிலுமாக வெற்றி தர வேண்டும் என்றும், மணியக்காரன் பட்டியில், மயானத்தில் சடனங்களை எரிப்பதற்கு தகன மேடை அமைத்து தர வேண்டும் என்றும் வலியுறுத்தி விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஏராளமான போராட்டத்தில் ஈடுபட்டினர். மேலும் தங்களுக்கு குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் இடம் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கி உடனடியாக நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டனர்.