விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் "உள்ளாட்சித் தினத்தை" முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு விருது & அசைவ விருந்து" வழங்கி கௌரவித்த ஊராட்சி மன்றத் தலைவர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களின் பணி மற்றும் சேவையை பாராட்டி கௌரவிக்கும் பொருட்டு இன்று விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற "உள்ளாட்சி தினத்தை" முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தூய்மைப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னாடை போர்த்தி அவர்களின் சேவையை பாராட்டி விருது வழங்கி கௌரவித்தனர். அத்தோடு உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு சுடச்சுட மீன், இறால் உள்ளிட்ட அசைவ விருந்தும் பரிமாறப்பட்டது. இவ்வாறு விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மை பணியாளர்களுக்கு விருது மற்றும் விருந்து வழங்கி கௌரவித்த நிகழ்வு ஒட்டுமொத்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் மனதிறக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.