விளாத்திகுளத்தில் மாவீரன் சுந்தரலிங்கனார் 255 வது புகழ் வணக்கம்!


இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு வீர முழக்கமிட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் போர்படை தளபதியாக சிறந்து வந்த மாவீரன் சுந்தரலிங்கனார்,1799-ம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை சிதறடிக்க வந்த ஆங்கிலேய படையினர், துப்பாக்கி மற்றும் பீரங்கி வெடிபொருட்களுடன் தொடர்ந்து போர் செய்து வந்தனர், ஆங்கிலேய பீரங்கி படையால் தாக்கு  பிடிக்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனின் படை பின்னடைவை சந்தித்து வந்தது, இந்நிலையில்1799-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி வீரன் சுந்தரலிங்கனார் மற்றும் அவரது மாமன் மகள் வடிவுடன் சேர்ந்து ஆடு மேய்ப்பவர்கள் போல் சென்று, தங்கள் மீது இருவரும் தீ வைத்துக் கொண்டு பீரங்கி மருந்துக்கிடங்க்குள் சென்று தற்கொலை படை தாக்குதல் நடத்தி ஆங்கிலேயர்களின் மொத்த பீரங்கி துப்பாக்கி உள்ளிட்ட மருந்து பொருட்களை அளித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை காப்பாற்றினர்.


வீரன் சுந்தரலிங்கனார் மற்றும் அவரது மாமன் மகள் வடிவு ஆகியோர் இருவரும் உலகின் முதல் தற்கொலை படை வீரர்கள் அவர்கள், வீரன் சுந்தரலிங்கனாரின் வீரத்தையும் தியாகத்தை போற்றும் வகையிலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் ஆண்டுதோறும் வீரன் சுந்தரலிங்கனாருக்கு  புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.


இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மாவீரன் சுந்தரலிங்கனார் புகழ் வணக்க விழா தமிழர் விடுதலைக் களம் நிறுவனர் பா. ராஜ்குமார்பாண்டியன் ஆலோசனையின்படி,தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில் விழாவில் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் கலந்துகொண்டு சுந்தரலிங்கனார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இவ்விழாவில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ்,தமிழர் விடுதலை கழகம் நகர செயலாளர் மகாராஜன்,ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், நிர்வாகி வெற்றிச்செல்வம், விளாத்திகுளம் பாரதி தெரு தலைவர் பாலன், சோலையப்பன் மற்றும் விளாத்திகுளம் வட்டார தேவேந்திர குல வேளாளர்  சமுதாய  இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.