ரூ.9.45 லட்சம்  மதிப்பீட்டில் புதிய நியாய விலைகடையை விளாத்திகுளம்  MLA மார்கண்டேயன் திறந்து வைத்தார் !

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அய்யாக்கோட்டையூர் ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார்,ராமராஜன்,கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன்,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.