மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டிய விளாத்திகுளம் MLA மார்க்கண்டேயன்!


தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் 06.11.2024 முதல் 11.11.2024 வரை ஈரோடு மாவட்டத்தில் வைத்து நடைபெற்ற  போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவி கனகலட்சுமி 19 வயதுக்குட்பட்ட1500 மீட்டர் ஓட்ட போட்டியில் மூன்றாவது இடம் பிடித்தார். 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கருத்த பாண்டி cross country 6km போட்டியில் முதல் பரிசு பெற்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறக்கூடிய தேசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பாராட்டி வாழ்த்தினார்.