தற்போது உள்ள தமிழக அரசு எந்தவிதமான அரசு பணிகள் செய்யாமல், கேளிக்கையும் சுற்றுப்பயணங்களுக்கும், உல்லாசங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்!
இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயத்தில் மேல்மாந்தை கிராம மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப்பெறாவிட்டால் விளாத்திகுளத்தில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் தமிழக அரசுக்கு எச்சரிக்கை!
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் பேசுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது, ஆய்வு கூட்ட முடிவின் அடிப்படையில் எந்தவிதமான முன்னேற்பாடு பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை, பல்வேறு நீர்ப்பாசன மதகுகள் சரி செய்யப்படவில்லை, கிராமப்புறங்களில் உள்ள மதகுகள் உடைப்புகள் சரி செய்யப்படவில்லை, எந்தவிதமான அத்தியாவசிய பணிகளை செயல்படுத்தாத இந்த அரசு, மிக முக்கிய துறைகளான நீர்ப்பாசன துறையின் முக்கிய அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள கோட்ட பொறியாளர் மற்றும் உயர் அதிகாரிகள் யாரும் அந்த கூட்டத்திற்கு வரவில்லை, அரசினுடைய இந்த மெத்தனபோக்கான செயல்பாடுகள் மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்க கூடியதாக இருக்கிறது , தினமும் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 10% முதல் 20% சதவீதம் தண்ணீர் மட்டுமே திந்து விடுவதால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினையால் மிகப்பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்,குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.
மிகக்கடுமையான மின்வெட்டு, இந்த மின்வெட்டின் காரணமாக அதிக உயர் மின்னழுத்தம் காரணமாகவும் மின் குறைவு காரணமாகவும், மின்சாதன பொருட்கள் எல்லாம் பழுதடைந்து உள்ளது.
இந்த அரசு செயல்படக்கூடிய மிகவும் முக்கியத்துறைகளான மின்சாரத்துறை, சாலைப் போக்குவரத்துதுறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்ப்பாசனதுறை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வளங்கள் துறை என்ற எந்தத் துறையிலும் எந்த கவனத்தையும் செலுத்தவில்லை.
நேற்றைய தினம் விளாத்திகுளத்தில் மிக முக்கியமான இந்த கரிசல்காட்டு பகுதி முழுவதும் 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய இரட்டை மாட்டு வண்டிகாளை பந்தயம் நடைபெற்று வருகிறது,இந்த பந்தயம் நடத்தியதற்காக கிராமத்தைச் சேர்ந்த 28 பேர் மீது சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர், அந்தகிராமத்தில் உள்ள 18 சமுதாயத்தினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பட்டபகலில் இரட்டை கொலை நடந்துள்ளது, பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது, தினமும் தமிழகத்தில் அரிவாள் வெட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, சட்ட ஒழுங்கில் போதைப்பொருள் விற்பனை செய்கிறவர்கள், பாலியல் வன்கொடுமையால் உட்படுத்தப்படுகிறவர்கள்,பாலியல் கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள், இங்கே இருக்கக்கூடிய இளைஞர்கள், பள்ளியில் படிக்கிறவர்கள் யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையில்...
மிக நிம்மதியாக கிராமம் கூடி அனைவரும் சேர்ந்து நடத்துகிற விளையாட்டுப்போட்டிகளை தடை செய்வது, மாட்டுவண்டி போட்டி மற்றும் நமது கலாச்சார போட்டிகளை தடை செய்வது, கிராமப்புறங்களில் போட்டிகளுக்கு அனுமதி தராமல் காவல் நிலையத்தில் கீழுள்ள அதிகாரிகளை மேல் உள்ள அதிகாரிகள் துன்புறுத்துவது.
விளாத்திகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் தினமும் விளாத்திகுளம் சட்டமன்ற அலுவலகத்திற்கு வந்து செல்கிறார்கள், நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் போட்டால் மக்களினுடைய பிரச்சினை பற்றி பேசினால் DSP,SP உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் போன் எடுப்பதில்லை,எதைக்கேட்டாலுமே அதிகாரிகளிடமிருந்து எதிர்த்து மறுத்து தான் பதில் வருகிறதே வழியே, மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை.
பொதுமக்கள் குடியிருப்பு பிரச்சனைக்கு வந்தால் FIR போடுகிறார்கள், கிராமத்தில் பொங்கல் நடத்தினால் FIR போடுகிறார்கள், கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடத்தினால் FIR போடுகிறார்கள், செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், அவரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் போது கிராமங்களில் அன்னதானம் போடுவது வழக்கம், கலைஞனாபுரம் கிராமத்தில் அன்னதானம் போட்டுக் கொண்டிருந்தபோது குளத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் நேரடியாக சென்று அன்னதானம் போடுபவர்களையும் சாப்பிடுபவர்களையும் விரட்டியுள்ளார் இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.
அனைத்து கிராமங்களிலும் அன்றாட நிகழ்வுகளையும் திருவிழாக்களையும் இந்த அரசு அவமானமாக கருதுகிறது,ஜோசப் விஜய்யின் தலைமையிலான இந்த அரசு எந்தவிதமான அரசு பணிகளையும் செய்யாமல், கேளிக்கைகளுக்கும், சுற்றுப் பயணங்களுக்கும், உல்லாசங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் அதனால் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேல்மாந்தை கிராமத்தில் இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயம் நடத்திய கிராம பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக இந்த அரசு திரும்பப் பெறாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை விளாத்திகுளத்தில் நடத்துவோம், இந்தப் பகுதியிலுள்ள 500க்கும் மேற்பட்ட கிராமங்களின் பாரம்பரிய விளையாட்டை நடத்தும் இந்த மக்களை துன்புறுத்துகிற அரசை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
எங்களுடைய தலைவர் மு.க.. ஸ்டாலின் நேற்று முப்பெரும் விழாவில் ஒரு அருமையான செய்தியை கூறியிருக்கிறார், இந்த அரசு போட்டி போடுகிற இரண்டு விஷயம் ஒன்று மின்வெட்டு மற்றொன்று அரிவாள் வெட்டு இந்த மக்கள் அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள், இந்த அச்சத்தை போக்க வேண்டியது அரசினுடைய கடமை, இந்த அச்சத்தை போக்கவில்லை என்றால், இந்த அரசுக்கு கடிவாளம் போட வேண்டிய இடத்தில் திமுக எதிர்க்கட்சி இருக்கிறது வன்மையாக அதை நாங்கள் கண்டிக்கிறோம் என விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் கூறினார்.