மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அய்யனார்புரம் கிராமத்தைச்சேர்ந்த மாற்றுத்திறனாளி மாரிச்செல்வம் சுயதொழில் மேற்கொள்வதற்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மாற்றுத்திறனாளியான மாரிச்செல்வம் கோரிக்கையை ஏற்று இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார்.
உடன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியசெயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.