விளாத்திகுளம் அருகே ரூ.98.18 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே ஊராட்சி ஒன்றியம்,கே.சுந்தரேஸ்வரபுரம் கிராமத்தில் ரூ.74.79- லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், விளாத்திகுளம் மதுரை ரோடு கே.சுந்தரேஸ்வரபுரம் ஊராட்சி ஒன்றியம்,பாலாஜி நகரில் ரூ.19.39- லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் சாலை அமைக்கும் பணியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்,இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித், தங்ககேவல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல், புதூர் மத்திய ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி, கழக நிர்வாகி பெருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.