காரியாலயத்தை திறந்து வைத்த விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்கண்டயேன்!
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும், மார்கண்டயேன் தேர்தல் அறிவித்த நாள் முதல் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பொதுமக்கள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று விளாத்திகுளம் சாலையம் தெரு பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து புதூரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முற்போக்கு மதசார்பற்ற கூட்டணி சார்பில் அமைக்கப்பட்ட காரியாலயத்தை விளாத்திகுளம் விளாத்திகுளம் திமுக வேட்பாளர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் புதூர் நகர செயலாளர் வெற்றிவேலன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், மும்மூர்த்தி, செல்வராஜ்,இம்மானுவேல் நிர்வாகி மருதுபாண்டி மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.