கபடி வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கிய விளாத்திகுளம் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன்!



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கபடி அணிகளுக்கு திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அளவிலான கபடி அணிக்கு கபடி வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கபடி அணியும் பங்கேற்க உள்ள நிலையில்,  போட்டியில் பங்கேற்க உள்ள கபடி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விளாத்திகுளம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிழக்கு ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் கபடி விளையாட்டுச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கியதோடு, வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக விளாத்திகுளம் பொறுப்பாளர் தங்கதுரை மற்றும் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து கலந்து கொண்டு வீரர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.