விளாத்திகுளம் அதிமுக சார்பில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு!



சட்ட மாமேதை டாக்டர்   அண்ணல் அம்பேத்கரின் 69- வது நினைவு தினம் இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது,இதன் ஒரு பகுதியாக  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு அதிமுக விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் தலைமையில் அண்ணல் அம்பேத்கருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.





இந்நிகழ்வில் விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், விளாத்திகுளம் அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து,அதிமுக நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சண்முகசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.