உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உடனடியாக மின் பெயர் மாற்றம் வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டியில் கவுண்டன்பட்டி, வெளவால்தொத்தி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மின்சார துறை சார்பில் பெயர் மாற்றம் மருத்துவத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை வழங்கினார்.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.