விளாத்திகுளம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர் : வைரலாகும் வீடியோ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அருணாச்சலபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சைமால் என்பவரது பசுமாடு இன்று மேய்ந்து கொண்டிருந்தபோது அவருக்கு சொந்தமான கிணற்றில்  திடீரென தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதனைக் கண்டவர்கள் உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி ஜேசிபி இயந்திரம் மூலம் கயிற்றைக் கட்டி பத்திரமாக மீட்டனர். மேலும், கிணற்றுனுள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்கும் வீடியோ காட்சிகள் இப்பகுதியில் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன...