தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள
சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய வந்த
முத்துமாரி மற்றும் மாவட்ட காவல்
கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்
செய்யப்பட்டனர்.
விளாத்திகுளம்
பகுதிகளில் வைப்பாற்றில் இருந்து விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்துக்குட்பட்ட மாசர்பட்டி,
எட்டயபுரம், விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், குளத்தூர் உள்ளிட்ட காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக
மாட்டு வண்டிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடி வருவது தற்போது
வரை வழக்கம், மணல் திருடும்
மாட்டுவண்டிகளுக்கு ஒருங்கிணைப்பு தலைவர் என்று ஒவ்வொரு காவல்
நிலைய பகுதிகளுக்கு ஒருவர் இருப்பதாக கூறப்படுகிறது, அவர் மாதம் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 40 ஆயிரம் ரூபாய் பணம் வசூல் செய்து காவல் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் அல்லது ஆய்வாளரிடம்
லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபடும் மாட்டு வண்டிகளின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து உதவி ஆய்வாளர் முத்துமாரி இந்த மாதத்திற்கான பணம் எங்கே என்று
கேட்டுள்ளார், அதற்கு அந்த
மாட்டு வண்டி ஒருங்கிணைப்பாளர் 25 ஆயிரம் பணத்தை உதவி ஆய்வாளர் முத்துமாரியிடடம்
கொடுத்துள்ளார், அதற்கு உதவி
ஆய்வாளர் முத்துமாரி அந்த
ஒருங்கிணைப்பாளரின் முறைத்தபடி மீதம் 15 ஆயிரம் எங்கே என்ன மிரட்டியவாறு கேட்டுள்ளார், அதற்கு அந்தமாட்டு வண்டி மணல் திருட்டு
ஒருங்கிணைப்பாளர் மீதம் 15 ஆயிரம் பணத்தை சி ஐ டி ஐயா செல்வகுமாரிடம்
கொடுத்துள்ளேன் அம்மா என்று கூறியுள்ளார்.
இதற்கு உதவியாளர் முத்துமாரி காவல்
நிலையத்தில் வைத்து மணல் திருட்டு ஒருங்கிணைப்பாளரை ஒருமையில் கடுமையாக திட்டியதாக
கூறப்படுகிறது. மேலும் காவல் நிலையத்தில் வைத்து நடந்த அனைத்து விஷயங்களையும் மாட்டு
வண்டி மணல் திருட்டு ஒருங்கிணைப்பாளர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சட்ட
விரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதற்கு உடந்தையாக இருந்ததற்காகவும்,காவல் நிலையத்தில் வைத்து லஞ்சம் பெற்றதற்காகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்
அதிரடியாக காவல் உதவி ஆய்வாளர் முத்துமாரி மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம்
செய்ய உத்தரவிட்டார்.மேலும் இது
குறித்து விளாத்திகுளம் பொறுப்பு டிஎஸ்பி
வெங்கடேஷ் சங்கரலிங்காபுரம் காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் முத்துமாரி
மற்றும் தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் ஆகியோரிடம் 22-08-2023 நள்ளிரவு 2 மணி வரை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
விசாரணையின் போது டிஎஸ்பி வெங்கடேஷ் ஏற்கனவே விளாத்திகுளம் பகுதிகளில்
காவல்துறையின் மானம் கப்பலேறி வருகிறது, இது போன்ற செயல்களில் ஈடுபட்டு மேலும் காவல்துறையினருக்கு நீங்கள் செய்த இந்த
செயல் மேலும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்று மிக வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
* காவல் உதவி
ஆய்வாளர் முத்துமாரி கடந்த ஓராண்டிற்கு முன்பு குளத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த
போது வைப்பார் கிராமத்தில் சட்டவிரோதமாக மாட்டு
வண்டியில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களிடம், நான் தாளமுத்து நகரில் புதிதாக வீடு கட்டி
வருகிறேன், எனக்கு தினமும் பத்து மாட்டு வண்டி மணல் இலவசமாக
தர வேண்டும் இல்லையென்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதாக
கூறப்படுகிறது, மேலும் குளத்தூர்
பகுதி மக்களிடம் அநாகரிகமாக நடந்து
கொண்டதாக இதற்கு முன் ஒருமுறை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
*அதேபோல்கூலிங் கிளாஸ்
போட்டபடி என்ஃபீல்டு பைக்கில் ரோமியோ போல் வளம் வந்த
தனிப்பிரிவு காவலர் செல்வகுமார் சட்டவிரோதமாக கல் இறக்குபவர்கள் மற்றும் மணல்
திருட்டில் ஈடுபடுபவர்களிடம் பல நாட்களாக ரகசிய கூட்டணியில் இருந்ததாக
கூறப்படுகிறது.
Vilathikulam
காவல் நிலையத்தில் வைத்து 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிட மாற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
7 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம்!
அடுத்த
பெண் உதவி ஆய்வாளர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்.
இதையும் படிக்கலாம்
வேப்பமுத்து எடுக்கசென்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழப்பு.
22 Jul 2026
எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
22 Jul 2026
மதிமுகவில் தொடங்கி திமுக வரை நடந்தது என்ன?
22 Jul 2026
தனி அரசாங்கம் நடத்தும் பேரூராட்சி நிர்வாகத்தின் தொடர் கூட்டுக்கொள்ளை!
21 Jul 2026