விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை விழுந்து இருவர் காயம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்(48) மற்றும் குருவார்பட்டி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார்(43) ஆகியோர் இருவரும் 25-04-2024 அதிகாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து  பேருந்துக்காக காத்திருந்தனர்அப்போது சற்றும் எதிர்பாராமல் பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து கண்ணன் மற்றும் ரவிக்குமார் தலையில் விழுந்தது, இதனால் காயமடைந்த ரவிக்குமார் மற்றும் கண்ணனை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக விளாத்திகுளம் பேருந்து நிலையம் உரிய பராமரிப்பு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 


விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி,திருச்செந்தூர், மதுரை, தென்காசி, ராமேஸ்வரம், மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது, விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே பேருந்து நிலையத்தை முறையாக பராமரிப்பு  செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.