எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில்  கடந்த ஒரு வாரமாக கழிவறை பூட்டி இருப்பதால் சுற்றுலா பயணிகள் அவதி!


எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகம் அலைச்சியம்...


முண்டாசு கவிஞன் பாரதியின் சொந்த ஊரான எட்டையாபுரத்தில்  பாரதியாருக்கு மணி மண்டபம் உள்ளது,இங்கு நாள்தோறும் தமிழக மட்டுமல்லாமல் அண்டை மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பாரதியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரின் புத்தகங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை பார்வையிடுவது வழக்கம், அதேபோல் பாரதியாரின் நினைவு நாள் அன்று பாரதியாரின் திருஉருவசிலைக்கு அரசு சார்பில் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதும், பாரதியார் மணிமண்டபத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் வழக்கம், அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கும்,பொதுமக்களுக்கும் பாரதியார் மணிமண்டபத்தில் கழிப்பிட வசதி உள்ளது.



இந்தகழிப்பிடத்தில், கழிவு நீர் தொட்டி அதிகளவில் நிரம்பியதால், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெண்கள்,ஆண்கள், மாற்றுத்திறனாளி என மூன்று கழிப்பிடங்களுக்கும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பிடத்திற்கு பூட்டு போடப்பட்டது, ஆனால் தற்போது வரை கழிவு நீர் தொட்டியை சரி செய்யாமல் இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.


எனவே பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள கழிப்பிடத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.