விளாத்திகுளம் தொகுதியில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை!
தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் இன்று வெளியிட்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சத்து 76 624 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நவம்பர் 4ஆம் தேதி துவங்கி நடைபெற்றது இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது இதைத் தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் அங்கீகரிக்கட்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி திருச்செந்தூர் கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்தம் 6 71,742 ஆண் வாக்காளர்கள் 7,046, 89 பென் வாக்காளர்கள் இதர பிரிவினர் என மொத்தம் 13 லட்சத்து 76,624 வாக்காளர்கள் உள்ளனர் மாவட்டம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின்பு 58, 092 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டும் இறந்தவர்கள் முகவரி மாற்றம் ஆகியவற்றில் 9 ஆயிரத்து 626 பேர் நீக்கம் செய்யப்பட்டும் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறு வரையறை செய்யப்பட்டதில் மாவட்டம் முழுவதும் 980 வாக்குச்சாவடி மையங்களில் 1864 வாக்கு சாவடிகள் உள்ளன.