காவல் துறை அத்துமீறலுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்; உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அரசன்குளம் கிராமத்தில் நடைபெற்ற 53 லட்ச ரூபாய் மதிபீட்டில் சமுதாய நலக்கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கனிமொழி எம். பி. செய்தியாளர்களிடம் பேசுகையில்
முறைப்படி இல்லாமல் ஒருவர் கைது செய்யப்பட்டு, அதை இயற்கை மரணம் போல் சித்தரிக்க முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையில் உயிரிழந்தவரின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினரே அத்துமீறி செயல்படுவது கவலைக்குரியதாக இருப்பதாகவும், முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் உள்ள காவல்துறையில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.
இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
நிகழ்வில் மாண்புமிகு.முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களுடன் இணைந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நிகழ்வில் தூத்துக்குடி
மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம்
தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர்
ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர்
அன்புராஜன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
காசிவிஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராமன்,செந்தூர்பாண்டி, புதுராஜா,ஆதிசங்கர்
ஒன்றிய பொறுப்பு
குழு உறுப்பினர்கள் ஜெயலட்சுமி ராஜகோபால், மாரியப்பன் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன், ஊர் தலைவர் பாலசுப்பிரமணியன் எப்போதும்வென்றான் சோலைசாமி
திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துராஜ் வடக்கு
மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் கேப்டன் கேசவன், வடக்கு மாவட்ட
பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரஞ்சித்,சென்றாய பெருமாள் கிளைச் செயலாளர்கள் பொன் முருகன், சரவணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.