நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் - அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது…



இந்த ஆட்சி ஊழலின் உச்சத்தில் இருக்கிறது- விளாத்திகுளத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பேட்டி!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக தேவையான முன்னேற்பாடுகள் செய்வது குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் செய்தியாளரிடம் பேசுகையில்,, 



வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் சரிவர செய்யவில்லை.  கண்மாய் மதகுகள், நீர்வரத்து பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. இது மிகுந்த வருத்தத்திற்குரிய செயல் 



 ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு பொன்னி அரிசி கொடுப்பதாக உணவுத்துறை அமைச்சர் கூறுகிறார் ஆனால் விளாத்திகுளம் பகுதியில்  நான் ஆய்வு மேற்கண்ட போது  76 சதவீதம் மட்டுமே ரேஷன் கடைக்கு பொருட்கள் வந்துள்ளன. அனைத்து மக்களுக்கும் முழுமையாக பொருட்களை கொடுக்க முடியாது இந்த அரசு  முப்பது ரூபாய்க்கு பொன்னி அரிசி கொடுக்கிறோம் என்று  பொய்யான கருத்தை அமைச்சரே கூறுகிறார். ரேஷன் கடையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களை  மிகப்பெரிய கஷ்டத்திற்கு உள்ளாக கூடிய சூழல் நிலவுகிறது 



நிதியாதாரம் இல்லை என்பதால் வடகிழக்கு பருவமழைக்கு போதிய முன்னேற்பாடு செய்யவில்லை என்ற அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் விஜய்க்கும் எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.




தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் போராடுகின்றனர். தூய்மை பணியாளர்கள் போராட்டத்தினால் குப்பை கழிவுகள் அகற்ற முடியாத நிலையில் டெங்கு காய்ச்சல், தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.. நீர்ப்பாசனத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் தூங்குகி கொண்டிருக்கிறார். மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர.,  நாடு அல்லல் பட்டு கொண்டு வருகிறது 



கூட்டு குடிநீர் மூலமாக கிராமங்களுக்கு குடிநீர் செல்லவில்லை. அவசர காலத்திற்கு மின்சாரம் கொடுக்கிறோம் என்று அதிக விலைக்கு வாங்கி  அநியாயமாக வயிற்றில் அடிக்கக்கூடிய இந்த அரசை  வன்மையாக கண்டிக்கிறேன்



கூட்டுறவுத்துறை சங்கங்களில் ஏற்கனவே வாங்கி கடனை கட்டியவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்படுவதில்லை. திமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. தற்போது விதைப்பு நேரம் என்பதால் விதை, உரம் வாங்க விவசாயிகள் எங்கு போவார்கள்? விவசாயிகளுக்கு மூன்று லட்ச ரூபாய் வரை கடன் கொடுக்க முடியும். ஆனால் இந்த அரசு கொடுத்திருக்கிறதா?



நடிகரை ஆட்சி பொறுப்பிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ரியல் முதல்வராக இருந்த மு க ஸ்டாலின்  நிர்வாகத்தை சிறப்பாக செய்தார் 


ரீல் முதலமைச்சராக இருக்கும் இந்த ஆட்சியின் தலைவர் ஜோசப் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அமைச்சரவை தூங்கிக் கொண்டிருக்கிறது. நாடு மிகப்பெரிய கஷ்ட நிலையில் இருக்கிறது 



விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். ஒருவர் விடுமுறை என்றால் மற்றொருவர்  எப்படி இரவு பகலாக பணியாற்ற முடியும்? இறந்த உடல்கள் உடற்கூறாய் செய்ய வேண்டுமென்றால் தூத்துக்குடிக்கு அனுப்புகிறார்கள்


அவசர கால நிலையில் மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டிய அரசு, லண்டனுக்கு செல்வதும், கேளிக்கைகளுக்கு செய்வதும், ஆந்திராவுக்கு போய் அந்நிய முதலீடுகளை இருக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு அங்கு போய் திரைப்பட நடிகர் வசனம் பேசுவது போல பேசுவதும். மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த ஆட்சி ஒரு கேலிக்கூத்தான ஆட்சியாக இருக்கிறது 



வெளிப்படையான டெண்டர் என்று கூறுகிறார்கள் ஆனால் அமைச்சருக்கே என்னவென்று தெரியவில்லை. பத்து சதவீதம் கமிஷன் கொடுத்தால் போதும் வேலை செய்யலாம் என்று சொன்னால்  அணைக்கட்டு வேலைகள் நடக்கக்கூடிய விஷயமாக இருக்கிறதா? இந்த ஆட்சி ஊழலின் உச்சத்தில் இருக்கிறது. அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்கின்றனர். நீர் வளத்துறையில் பணிகள் செய்ய அதிகளவு கமிஷன் கேட்கின்றனர். அதிகாரிகளை வேலை செய்யவிடாமல் இந்த ஆட்சி தடுக்கிறது. இந்த ஆட்சி தன்னை திருத்தி கொள்ள வேண்டும் 


அமைச்சர் அருண் ராஜ்,  சர்ச் வாரண்டில் விஜயை பிடிக்கப் போனவர். அவரிடம் சம்திங் வாங்கிக்கொண்டு, அவருடன் அரசியலில் சேர்ந்து விட்டார். அவருக்கு இந்த மக்கள் மன்றத்தை பற்றி என்ன தெரியும். திருச்செங்கோட்டில் எத்தனை மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்.



அமைச்சர் வந்து திறந்து வைப்பார் என்று கூறி  திமுக ஆட்சியில் விளாத்திகுளம் பகுதியில் கட்டப்பட்ட 20 கட்டடங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இங்குள்ள பொறுப்பு அமைச்சர்( அமைச்சர் ஸ்ரீநாத்)  ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆறு, ஏழு முறை தான் வந்துள்ளார். ஆய்வு கூட்டம் என்றாலும் தாமதமாக தான் வருகிறார்.. இந்த ஆட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. நடிகர்களின் ஆட்சி எந்த நிர்வாகத் தன்மையும் இல்லை. மிகவும் மோசமான நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்களும் மக்கள் தான் இதை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.