விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தமிழ்மாத பிறப்பு மற்றும் தமிழ்மாத முதல் வெள்ளியை முன்னிட்டு  திருவிளக்குபூஜை நடைபெற்றது!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தமிழ்மாத பிறப்பு மற்றும் தமிழ்மாதத்தின் முதல் வெள்ளியை முன்னிட்டு விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு, மகாலட்சுமி மற்றும் சரஸ்வதியை வேண்டி திருவிளக்கை தெய்வமாக கருதி, வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெறுக, சுற்றுப்புறத்தில் இருக்கும் இருளையும், நம் மனதில் உள்ள இருளையும், பாவங்களையும் நீக்கவும் பெண்கள் குழுவாக சேர்ந்து திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.


பொதுவாக பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் திருவிளக்கு வழிபாடு செய்வது மிகச்சிறந்த நற்பலன்களை தருவதாக காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.


தமிழ் மாதங்களில் 12 மாதங்களிலும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்படும் அந்தந்த மாதங்களில் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் என்பது இறை நம்பிக்கையாகும்.