மாசிமாத கடைசி வெள்ளியை முன்னிட்டு "மேல்மாந்தை ஸ்ரீ பெத்தனாட்சியம்மன் திருக்கோவிலில் விமர்சையாக நடைபெற்ற தீமிதி திருவிழா!"
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவிலில், மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பல்வேறு பூஜைகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் ஏராளமான பக்தர்கள் பெத்தனாட்சியம்மனுக்கு பொங்கல் வைத்து அங்கு நடைபெற்ற விசேஷ பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் மாசி மாத கடைசி வெள்ளி முன்னிட்டு இக்கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். புகழ்பெற்ற இந்த பெத்தனாட்சி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை காண இன்று கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்ததால், ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.