“ செந்தில் நகர் வேலனே ” வருக என விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை வரவேற்க தமிழர் பாரம்பரியபடி ஆரத்தி பாடலை பாடி வரவேற்ற கிராம மக்கள்!   


கழிவுநீர் கால்வாயை சரி செய்ய கோரி சட்டமன்ற உறுப்பினரிடம் கிராம மக்கள் கோரிக்கை!


கடந்த திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பூமி பூஜை செய்து தொடங்கப்பட்ட அரசுப் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.  



இடைச்சியூரணி கிராமத்தை நியாயவிலை கடை திறப்பு, வாதலக்கரை கிராமத்தில் நியாய விலை கடை திறப்பு, காடல்குடி கிராமத்தில் பயணியர் நிழற்குடை,ஊராட்சி மன்ற அலுவலகம் நியாயவிலை கடை திறப்பு,P. ஜெகவீரபுரம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை திறப்பு உள்ளிட்ட நிறைவடைந்த திட்டப்பணிகளை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் வந்திருந்தார்.



அப்போது இடைச்சியூரணி கிராமத்தில் உள்ள நியாய விலை கட்டிடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க வந்த  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனுக்கு கிராம மக்கள் “ செந்தில் நகர் வேலனே ” வருக என முருகனின் ஆரத்தி பாடலை பாடி தமிழர்களின் பழமை மாறாத ஆரத்தி எடுத்து சிறப்பு வரவேற்பு அளித்தனர் வரவேற்றனர்.


அதனைத்தொடர்ந்து வாலக்கரை கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் மழை நீர் கால்வாயில் தேங்கியுள்ளதாக, கிராம மக்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் கோரிக்கை வைத்தனர், அதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், கழிவு நீர் கால்வாயை முறையாக தூர்வாரும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.


நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,தனலட்சுமி கூட்டுறவு சார்பதிவாளர் முருகலட்சுமி,புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி ஒன்றிய பிரதிநிதி சிவலிங்கம்,கிளைச்செயலாளர்கள் ரவி (எ) சுப்பையா, முருகதிருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கிராமபொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.