அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை நல்லடக்கம் செய்த விளாத்திகுளம் போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் காட்டுப்பகுதியில் 08-06-2025 ஞாயிற்றுக்கிழமை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக விளாத்திகுளம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இறந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இறந்த நபர் குறித்து எந்த விவரமும் தெரியாமல் இருந்ததும். அதேபோல் ஏற்கனவே அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததன் காரணமாக, விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் அந்த அடையாளம் தெரியாத நபரின் உடலுக்கு இன்று திங்கள்கிழமை 09-06-2025 இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்தனர்.
மேலும் உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.