விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற  சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் !


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால்,தயிர்,சந்தனம்,பன்னீர்,இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது, பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


பின்னர் வேத மந்திரங்கள் முழங்க  சவபெருமானுக்கும் நந்திபெருமானுக்கும் பஞ்சமுக தீபாதாரனை நடைபெற்றது, அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் “ ஓம் நமச்சிவாயா ” என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.