விளாத்திகுளம் அருகே தமிழக அரசை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது "சின்னவநாயக்கன்பட்டி பகுதி அருந்ததியினர் மக்களுக்கு, அடிப்படை வசதிகளான சுடுகாடு, எரிமேடை, காத்திருப்பு அறை, நடைபாதை மற்றும் வாருகால் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். "சங்கரலிங்கபுரத்தில் மர்மமான முறையில் இறந்த அருந்ததியர் சமூக பெண் கிருஷ்ணவேணி மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். "புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் கருப்பசாமியை வன்கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் தாஸ், விளாத்திகுளம் தொகுதி ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் புலிகள் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்ள புதூர் பேருந்து நிலையம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது "சின்னவநாயக்கன்பட்டி பகுதி அருந்ததியினர் மக்களுக்கு, அடிப்படை வசதிகளான சுடுகாடு, எரிமேடை, காத்திருப்பு அறை, நடைபாதை மற்றும் வாருகால் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். "சங்கரலிங்கபுரத்தில் மர்மமான முறையில் இறந்த அருந்ததியர் சமூக பெண் கிருஷ்ணவேணி மரணத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். "புதூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் கருப்பசாமியை வன்கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் தாஸ், விளாத்திகுளம் தொகுதி ஒன்றிய செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் புலிகள் கட்சியினர் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.