கமுதி அருகே கண்மாய்  ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது கோவிலாங்குளம் கிராமம்,இந்த கிராமத்திற்கு சுமார் 300 ஏக்கர்  அளவுள்ள கண்மாய் உள்ளது.இந்த கண்மாய் கோவிலாங்குளம் கிராமத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.தற்போது கோவிலாங்குளம் நீர் பிடிப்பு பகுதிகளில் 15 ஏக்கர் அளவில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அடைத்து தண்ணீர் தேங்காத வண்ணம் செய்துள்ளனர்.இதுகுறித்து கமுதி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்றப்படாத நிலையில். இன்று கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 100 பெண்கள் உட்பட 250 பேர் கோவிலாங்குளம் ஊரின் முன்பு கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்  நடத்த ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி  வருவாய்த்துறையை உதவியோடு ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்ததை பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கண்மாய் ஆக்கிரமிப்பை எடுக்க கோரியும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் கமுதி தாசில்தாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதனால் கோவிலாங்குளம் கிராமம்  முழுவதும் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.