விளாத்திகுளம் செய்தியாளர் நா நீ பெரிய மயிரா:போலீஸ ஒழுங்கா ஐயானு கூப்பிடு.,செய்தியாளர்களை மிரட்டும் காவல்துறை!
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் புதூர் ஒன்றிய பாஜக மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சுதந்திர தின எழுச்சி பேரணி நடைபெற்றது, அப்போது இந்த நிகழ்ச்சியை செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க வந்திருந்தனர், செய்தி சேகரிக்க குழு புகைப்படம் எடுத்தபோது காவல்துறையினர் கட்சியினருக்கு நடுவே நின்றனர்,
அப்போது செய்தியாளர்கள் காவல்துறையினரிடம் "அங்கிட்டு நில்லுங்க இல்லை இங்கிட்டு நில்லுங்க" என்று கூறினர், இதனை அடுத்து மதுரை சாலையில் இருந்து தொடங்கிய பேரணி பேருந்து நிலையம் வழியாக புதூர் முருகன் கோவிலில் நிறைவடைந்தது, அப்போது அங்கு வந்த முதல் நிலைக் காவலர் ஜனார்த்தனன், நீ எங்களைப் பார்த்து எப்படி போட்டோவுக்கு அங்கிட்டு நில்லுங்க இங்கிட்டு நில்லுங்கன்னு சொல்ல போச்சு? செய்தியாளர் நா நீ என்ன பெரிய மயிராயா? ஒழுங்கா போலீஸ் பார்த்து சாரு “ஐயா SIR “ என்று கூப்பிட்டு பழகு என்று செய்தியாளர்களை மிரட்டினார்.
"சிங்கம்" பட பாணியில் பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை மிரட்டி ஹீரோசம் காட்டும், விளாத்திகுளம் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள காவல்துறையினர், பள்ளி கல்லூரி பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது, விளாத்திகுளம் காவல் உட்கோட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் சட்ட விரோத மதுவிற்பனை நடைபெற்று வருகிறது, குறிப்பாக புதூர் காவல் நிலைய அழைக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் 24 மணி நேர சட்டவிரோதம் மது விற்பனை நடைபெற்று வருகிறது, காவல்துறையினர் இதை தடுத்து நிறுத்தினால் அன்றாட கூலி வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள் ஒழுங்காக வேலைக்கு சென்று தங்களின் குடும்பத்தை காப்பாற்றுவார்கள்.
விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் விளாத்திகுளத்தில் பணியில் சேர்ந்த நாள் முதல்,சட்டவிரோத மது விற்பனை,கஞ்சாவிற்பனை,திருட்டுமணல்,கண்மாயில் கரம்பைமண் எடுப்பவர்களிடம் என தினமும் காவல் நிலையங்களில் உள்ள காவலர்களை கட்டாயப்படுத்தி 1 லட்சம் ரூபாய் மாமுல் வசூல் செய்யாமல் வீட்டுக்கு போவதில்லை என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் DSP அசோகன் காவல்துறை எவ்வாறு பொதுமக்கள் மற்றும் செய்தியாளரிடம் காவல்துறை நடந்து நடந்து கொள்ள வேண்டும் என்று ஒழுங்குபடுத்துவார்? இன்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.