விளாத்திகுளம் அருகே சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின எழுச்சி பேரணி நடைபெற்றது!
வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது, இதன் ஒருபகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் சார்பாக சுதந்திர தின எழுச்சி பேரணி நடைபெற்றது, இந்த பேரணியானது புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தொடங்கப்பட்டு புதூர் பேருந்து நிலையம் வழியாக புதூர் முருகன் கோவிலில் நிறைவு பெற்றது, பேரணிகள் கலந்து கொண்டவர்கள் கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டபடி வழி நெடுகிலும் பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்வில் பாஜக மாவட்ட தலைவர் சரவணன கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராஜ், மண்டல தலைவர் பிரேஸ் நவ், ஒன்றிய பொதுச்செயலாளர் பழனி முருகன்,ஒன்றிய பொதுச்செயலாளர் அழகர்பாபு, பாஜக நிர்வாகிகள் ராஜா மகளிரணி அஷ்டலட்சுமி,அன்னபூரணி, மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.