விளாத்திகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி!
நாம் தமிழர் கட்சியின் விளாத்திகுளம் தொகுதி வேட்பாளராக பாலாஜி என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் விளாத்திகுளம் தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இயந்திரவியல் துறையில் முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்போது கணினி மையம் மற்றும் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். ஏற்கனவே 2021ல் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.