விளாத்திகுளத்தில் பூஜை செய்து  துவக்கப்பட்ட  முதல் நாளிலே நடுசாலையில் பழுதாகி நின்ற புதிய அரசுப்பேருந்து!



புதிய பேருந்தை ஓரமாக தள்ளி அப்புறப்படுத்திய போக்குவரத்து ஊழியர்கள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து நாகலாபுரம்,கீழக்கல்லூராணி, மேலகல்லூரணி, துரைச்சாமிபுரம், கோவில் குமரட்டையாபுரம்,

பூதலாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மாவிலோடை கிராமத்திற்கும், அதே பேருந்து வில்வமரத்துப்பட்டி, சுந்தரேஸ்வராபுரம், சுப்பையாபுரம், காடல்குடி,மிட்டா வடமலாபுரம், மல்லீஸ்வரபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக உச்சநத்தம் கிராமத்திற்கும் 77 A என்ற வழித்தட மகளிர் இலவச அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.



இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்து அடிக்கடி பழுதாகி நின்றதால், அப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் புதிய பேருந்து வேண்டுமென்று அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்,அக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று அரசு போக்குவரத்து திருநெல்வேலி மண்டலம் சார்பில் புதிய அரசு பேருந்து மாவிலோடை மற்றும் உச்சிநத்தம் வழித்தடத்திற்கு புதிய மகளிர் இலவச அரசு பேருந்து   வழங்கப்பட்டது.



அவ்வாறு வழங்கப்பட்ட அரசு பேருந்துக்கு  விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனையில் இன்று காலை  பேருந்துக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை  செய்த பின் காலையிலிருந்து மாலை வரை சிறப்பாக வழித்தடத்தில் இயக்கப்பட்ட அந்த அரசு பேருந்து, மாலை 6:05 மணி அளவில்  விளாத்திகுளம் பேருந்து நிலையத்திலிருந்து மாவிலோடை செல்வதற்காக பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த புதிய அரசுபேருந்து  மதுரை சாலை வழியில் திரும்பியபோது பழுதாகி நின்றது, இதனால் பெரும்பாலான வாகனங்கள் மதுரை சாலைக்கு செல்ல முடியாமலும் எட்டையாபுரம் வேம்பார் உள்ளிட்ட சாலைகளுக்கு செல்ல முடியாமலும்  சாலையிலே நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.




அதனைத்தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்குப் பின்பு விளாத்திகுளம் அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்கள்,பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்   அங்கிருந்த புதிய அரசு பேருந்தை ஓரமாக தள்ளி  அப்புறப்படுத்தினர்.