விளாத்திகுளம் அருகே ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ வீரகாளியம்மன் திருக்கோவில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை கரையடி அம்மன் கோவிலில் இருந்து கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய பொங்கல் விழா, திருவிளக்கு பூஜை அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான இன்று காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள்,நையாண்டி மேளத்துடன் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர், அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் வைத்து பெண்கள் முளைப்பாரியை சுற்றி அம்மனை வர்ணித்து கும்மி அடித்தனர்.
அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது, பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட முளைப்பாரியை குளக்கரையில் கரைத்து பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினார்.