விளாத்திகுளம் அருகே புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து எம்.எல்.ஏ வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34-லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும், மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80- லட்சம் மதிப்பீட்டில் உணவு தானியக்கிடங்கு கட்டுவதற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார்.மேலும் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.29.97-லட்சம் மதிப்பீட்டில் 600000/- லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்..உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரவிந்த் வெங்கடாசலம் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.