விளாத்திகுளம் அருகே கபடி போட்டியை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழஈரால் கிராமத்தில் புனித செபஸ்தியார்  ஆலயம் 32-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு,AMC-கபாடி குழு நண்பர்கள் நடத்தும் 28-ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள் திமுக கட்சி நிர்வாகிகள், கபடி வீரர்கள், என பலர் கலந்து கொண்டனர்.