விளாத்திகுளம் - காடல்குடி வழியாக கூடுதல் பேருந்து சேவையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்,காடல்குடி வழியாக உச்சிநத்தம் செல்லும் அரசு பேருந்து வில்வமரத்துப்பட்டி பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து காலை மற்றும் மாலை வேளையில் வில்மரத்துப்பட்டி வழியாக காடல்குடி,உச்சிநத்தம் செல்வதற்கு பேருந்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்வில் விளாத்திகுளம் அரசு பணிமனை மேலாளர்  A.M.சாமி கோட்ட மேலாளர் ரமேஷன்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.