விடியல் பயண புதிய பேருந்து வழித்தடத்தை விளாத்திகுளம் MLA கொடியசைத்து துவக்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலிருந்து ஆற்றங்கரை, N.வேடப்பட்டி,தாப்பாத்தி,சக்கிலிபட்டி,கைலாசபுரம் வழியாக இருக்கன்குடிக்கு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து வழித்தடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் விளாத்திகுளம் பணிமனை மேலாளர் A.M.சாமி, விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி,விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள்,பொது மக்கள் கலந்து கொண்டனர்.