"என் புள்ளையை எப்படியாவது கண்டுபிடிச்சு கொடுங்க..." : கொச்சின் கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று கடலில் மாயமான விளாத்திகுளம் இளைஞரின் தாய் மற்றும் மனைவி கண்ணீர் விட்டு கதறல் : இளைஞரை மீட்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையடிப்பட்டி சாலமோன் நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை(30) என்பவர் கடந்த நவம்பர் 22-ம் தேதி வெள்ளிக்கிழமை கொச்சின் கடற்கரையில் இருந்து மீன்பிடிப்பதற்காக விசைப்படகில் குஜராத் கடல் பகுதிக்கு சென்று அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கடலில் இருந்து தவறி விழுந்ததாகவும், அவரை தேடிக் கொண்டிருப்பதாகவும் படகின் உரிமையாளரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த பெர்க் என்பவர் அண்ணாதுரையின் குடும்பத்தினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சடைந்த அண்ணாதுரை என் குடும்பத்தினர் படகின் உரிமையாளரிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அண்ணாதுரையின் பெற்றோர் மற்றும் அவரது மனைவி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடலில் விழுந்து மாயமானதாக சொல்லப்படும் அண்ணாதுரை மீட்டு தரக்கோரி கோரிக்கை வைத்தனர். ஆனால் தற்போது வரை கடலில் விழுந்ததாக சொல்லப்படும் அண்ணாதுரை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.....