2021 முதல் 2026 வரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளது : விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் ஆதரித்து குஷ்பூ பிரச்சாரம்!
திமுக ஆட்சியில் பெண்கள் மீதான அக்கறை கிடையாது, சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் பாதுகாப்பில் இருந்த பெண் போலீசார் மீது திமுகவினர் கைவத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் நடிகையுமான குஷ்பூ சுந்தர் இன்று விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய குஷ்பூ இந்த விளாத்திகுளம் ஊர் மிகவும் அழகான ஊர், எங்க ஊர போய் பாருங்க மக்களை சந்தித்து பாருங்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியும்.
இன்று இன்னும் ரொம்ப முக்கியமான நாள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒவ்வொரு முறையும் பெண்களின் முன்னேற்றத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.
இன்றைக்கு நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் அடைந்து விட்டோம், ஆனா இதுவரைக்கும் பெண்களுக்காக எதுவும் செய்யவில்லை, மைனாரிட்டியை சொல்லும் பொழுது அந்தப் பெண்களுக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு தளத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தது.
பிரதமர் மோடி அவர்கள் ஆனா 33% பெண்களுக்கு ரிசர்வேஷன் பில் இருக்கணும் அப்படி சொல்லும்போது பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொரு முறை சொல்லும்போது இந்த 33% பெண்களுக்கான ரிசர்வேஷன் பில் வந்தால் தான் உண்மையிலேயே பெண்களுக்கு ஒரு விடுதலை இருக்கும் அவங்களுக்கு ஒரு முன்னேற்றம் இருக்கும் இன்னைக்கு அவரால முடிஞ்சது பார்லிமெண்ட்ல 33% வுமன் ரிசர்வேஷன் பில் பாஸ் ஆயிருக்கு.
இங்கே இருக்கிற பெண்கள் ஒரு வீடு பார்க்கக் கூடிய நீங்க ஒரு தொகுதி பார்க்க முடியாதா என்ன, உங்களுக்காக ராப்பகலா கஷ்டப்பட்டவர் அம்மா ஜெயலலிதா, உங்கள நல்லபடியா வச்சுக்கலயா, பெண்களை எப்படி இருக்க வேண்டும் பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் பெண்கள் எப்படி முன்னேற வேண்டும் என்பதுக்கு எடுத்துக்காட்டு அம்மாவை தாண்டி யாரும் இருக்க முடியாது.
அதேபோல் புரட்சித் தலைவர் எம்.ஜி..ஆர் ஆக இருக்கட்டும் எடப்பாடி யாராக இருக்கட்டும், பெண்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தது அதிமுக தான்.
ஆனால் திமுகவை நீங்கள் பாருங்கள், உங்களுக்கு தெரியும் மார்ச் 10ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு படிக்கக் கூடிய ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர், ஆனால் அந்த கொலையை செய்தவர்கள் யாரு, ஏற்கனவே 2022 ல இதே மாதிரி பாலியல் கொலை குற்றங்களில் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது, ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட அவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார், போன வருடம் டிசம்பர் மாதம் வெளியே வந்தவர் மூன்று மாதத்தில் ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார், இவர்களுக்கெல்லாம் எங்கிருந்து தைரியம் வருகிறது. ஒரு பெண்கள் மீது கை வைக்கிற தைரியம் எங்கிருந்து வருகிறது.
திராவிட முன்னேற்ற ஆட்சியில் மட்டும்தான் இந்த தைரியம் வருகிறது, 2021 முதல் 2026 வரை இந்த 5 வருடத்தில் 300 சதவீதம் பெண்களுக்கான வன்கொடுமை அதிகரித்துள்ளது.
இந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் சட்டசபையில் ஒரு பேப்பர் கொடுக்கப்பட்டது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளது என்று கூறப்பட்ட நிலையில் ஸ்டாலின் என்ன பேசினார், உடலின் ஸ்டாலின் பேசியது ஏன் பக்கத்து மாநிலத்தில் நடக்கவில்லையா? ஏன் இந்த மாநிலத்தில் நடக்கவில்லையா? பாஜக ஆளும் மாநிலத்தில் இது நடக்கவில்லையா? என்று கூறியதாகவும் உங்கள் வீட்டில் என்ன நடக்குது என்று பாருங்கள் மக்களுக்கு என்ன வாக்குறுதி நீங்கள் கொடுத்தீர்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் அப்பா என்று சொல்கிறார்கள், நீங்கள் அப்பா இல்லை சார் உங்கள் ஆட்சியில் எல்லாம் தப்பாகத் தான் நடக்கிறது .
திமுக ஆட்சியில் பெண்கள் மீதான அக்கறை கிடையாது, சமீபத்தில் நடந்த ஒரு பிரச்சாரக்கூட்டத்தில் பாதுகாப்பில் இருந்த பெண் போலீசார் மீது திமுகவினர் கைவத்துள்ளனர்.
இன்றைக்கு தமிழகத்தில் பார்க்கும் பொழுது பெண்களுக்கு பாதுகாப்பில்ல,போதை கலாச்சாரம், போதைக்கலாச்சாரம் எந்த அளவுக்கு இருக்கு என்றால் அவங்க கட்சியிலேயே, அவங்க கூட்டணியிலேயே இருக்கிற ஒரு அம்மா ஒரு கட்சித் தலைவி மேடையில் பேசும் பொழுது சொல்லி இருக்காங்க, ஆமா திமுக ஆட்சியில பாலியல்,கொலை, போதைகலாச்சாரம் அதிகரித்துள்ளது என்று பேசி உள்ளார், இதைத்தாண்டி என்ன சொல்ல முடியும் இது வெட்கக்கேடு இல்லையா?.
இன்னைக்கு ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கூடம் போகும்பொழுது பாட்டலில் சாராயம் வைத்துப் போகிறார்கள் , ஸ்கூலுக்கு போன ஒரு டீச்சர் சொல்றாங்க கஷ்டமா இருக்கு, மாணவர்கள் கையில் பச்சை மிட்டாய், சிகப்பு மிட்டாய்,மஞ்ச கலர் மிட்டாய் வேற வேற பேர் கொடுத்து இருக்காங்க. பச்சை மிட்டாய் சாப்பிட்டால் ஆகாயத்தில் பறக்கிற மாதிரி இருக்காம், மஞ்ச மிட்டாய் சாப்பிட்டால் ஏதோ சுற்றுகிறதாம், இன்னொரு செவப்பு மிட்டாய் சாப்பிட்டால் டீச்சர் முன்னாடி கண்ணு திறந்து இருக்கும் ஆனா தேவதைகள் நம் பக்கத்தில் உட்கார்ந்து இருப்பாங்க இதான் பசங்க சொல்றாங்க, இதை கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் சொல்லி இருக்காங்க.
எல்லாக்கல்லூரி வாசல்களிலும் ஈசியாக போதை பொருள்கள் கிடைக்கிறது, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எங்கே போய்க் கொண்டிருக்கிறது நமது தமிழ்நாட்டின் கலாச்சாரம்?. இன்றைக்கு திமுக ஆட்சியில் உள்ள ஒரே கலாச்சாரம் போதை கலாச்சாரம்,
மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை பற்றி அமைச்சர்கள் சொல்கிறார்கள் ஆயிரம் கொடுக்கிறார்கள் அதுல தானே லிப்ஸ்டிக் வாங்கி போடுகிறீர்கள போட்டு போறீங்களா? எப்படி நீங்க ஆயிரம் ரூபாய் வாங்குறது லிப்டிக் போடறதுக்கா?.
மகளிருக்குஇலவச பேருந்து ன்னு சொல்றாங்க ஆனா ஒரு திமுக அமைச்சர் சொல்லுறாரு நீ ஓசியில தானே போற னு சொல்லுறாரு, சமுதாயப் பெண்களை வேறு மாதிரி ஒப்பிட்டு பேசினார்கள் அது அந்த அளவுக்கு அசிங்கமாக உள்ளது.
பெண்களை அசிங்கப்படுத்துவது இழிவு படுத்துவது இது மட்டும் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலாச்சாரம் என குஷ்பூ தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன்,பால்ராஜ் அதிமுக நகரசெயலாளர் மாரிமுத்து, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சரவணன்கிருஷ்ணன்,கந்தசாமி அதிமுக அம்மா பேரவை வரதராஜபெருமாள், அமமுக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,மருதுபாண்டி அதிமுக நிர்வாகிகள் ராமநாதன்,பிரவீன்குமார் மகளிர் அணி சாந்தி,பிரியா மற்றும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர் .