திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளாக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியது: விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர் சத்யா வாக்கு சேகரிப்பு!  


விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் இணைந்து, கழுகாசலபுரம்,எப்போதும்வென்றான்,காட்டுநாயக்கன்பட்டி,ஆதனூர், மிளகுநத்தம்,அய்யர்பட்டி,முள்ளூர்,கொல்லம்பரம்பு,சந்திரகிரி, மீனாட்சிபுரம்,ராமச்சந்திராபுரம்,வேலாயுதபுரம்,குமாரபுரம்உள்ளிட்ட பகுதிகளில் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் அதனைத் தொடர்ந்து ஆதனூர் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அதனைத் தொடர்ந்து   வேட்பாளர் சத்யா பேசுகையில் ...

கடந்த 5 ஆண்டுகளாக திமுக அரசு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றியுள்ளது, 100 நாள் வேலையை 150 நாளாக மாற்ற வேண்டும் என்று கூறியது.

கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது.


நீட் ஒழிக்கப்படும் என்று கூறியது.

மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் சேரவில்லை, அவ்வாறு ஒரு சில பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகையும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மட்டும் தான் வழங்கப்பட்டது,அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை,திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளாக பொய்யான வாக்குறுதிகளை குறித்து மட்டுமே மக்களை தற்போது வரை ஏமாற்றிய வருவதாக வேட்பாளர் சத்யா குற்றம் சாட்டினார்.இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் N.K பெருமாள், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் போடுசாமி, எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார்,அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு கண்ணன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.