விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கிராமத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி துவக்கம்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய 15 வது நிதி குழுவில் இருந்து பெரியசாமிபுரம் கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைப்பதற்கு ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து  புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விளாத்திகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணியை  தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் பெரியசாமிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மரிய ஆரோக்கிய சூசை துணைத் தலைவர் பெப்பி கிராம பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.