மாட்டு வண்டி எல்கை பந்தய முன்னேற்பாடுகளை விளாத்திகுளம் எம்.எல்.ஏ ஆய்வு !


முன்னாள் முதலவர் கலைஞர் காருணாநிதியின்  102-வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சார்பில் வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விளாத்திகுளம்  - க.சுப்பிரமணியபுரத்தில் நடைபெறும் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகளை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் .மார்கண்டேயன் ஆய்வு செய்தார்..

உடன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.