விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ரூபாய் 14 கோடி மதிப்பில் அம்ரூத் 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருடன் இணைந்து விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளான கத்தாளம்பட்டி, துலுக்கன்குளம், விளாத்திகுளம் பத்திரகாளியம்மன்கோவில்,காய்கறி மார்க்கெட்,மீரான்பாளையம்தெரு, சாலையம் தெரு, சத்யா நகர் காமராஜர்நகர்,சிதம்பரம்நகர்,துளசிபட்டி,ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய மார்கண்டயேன், விளாத்திகுளம் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் 10000-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ரூபாய் 14 கோடி மதிப்பில் அம்ரூத் 2.0 திட்டம் தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்னும் சில மாதங்களில் விளாத்திகுளம் பேரூராட்சி முழுவதும் குடிநீர் கட்டுப்பாடு பிரச்சினை இல்லாத சூழ்நிலை உருவாகும், பேரூராட்சி பகுதி முழுவதும் பேவர் பிளாக்சாலைகள் அத்துடன் சேர்ந்து அமைக்கப்படும், அதேபோல் கத்தாளம்பட்டி கிராமத்தில் கிராம முழுவதும் பேவர் பிளாக்சாலை அமைப்பதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்ற வருகிறது, என கூறி விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் செய்த நலத்திட்ட பணிகளை எடுத்துக் கூறியும் மார்க்கண்டயேன் வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா ஐயன்ராஜ்,தேர்தல் பொறுப்பாளர் ஸ்ரீதர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சடையாண்டி,உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.