விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு அம்ருத் 2.0 திட்டப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிவு!

 



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சன்னதி தெருவில் அம்ருத் 2.0 திட்டப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டடேயன் அறிவுறுத்தலின்படி பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியானது துரித படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணியினை விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ்,விளாத்திகுளம் பேரூராட்சி மன்றத்துணைத் தலைவர் வேலுச்சாமி,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,  விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், வார்டு உறுப்பினர் சரண்யா ஸ்ரீதர்,பொறியாளர் மருதுபாண்டியன் வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, தாளமாணிக்கம். ஒப்பந்தக்காரர் தங்கராஜ் அன்பில் நாராயணமூர்த்தி. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.